News February 25, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 25, மாசி 13 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

Similar News

News February 28, 2026

அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய திருமாவளவன்

image

பிஹாரில் நிதிஷ் குமாரை கையாண்டதுபோல், தமிழகத்தில் அதிமுகவையோ திமுகவையோ பாஜகவால் எளிதாக கையாள முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அதிமுகவிற்கென தனித்தன்மை இருப்பதாக குறிப்பிட்ட அவர், திராவிட இயக்கமான அதிமுகவை அவ்வளவு எளிதாக விழுங்கி செரித்துவிட பாஜகவால் முடியாது எனக் கூறியுள்ளார். அதிமுக பற்றிய திருமாவளவனின் கருத்தை எப்படி பார்க்கிறீங்க?

News February 28, 2026

இஸ்ரேல் சென்றது பிரதமரின் கோழைத்தனம்: காங்கிரஸ்

image

PM மோடி தனது இஸ்ரேல் பயணத்தை கொண்டாடி முடித்த 2 நாள்களில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. போர் மேகங்கள் சூழ்ந்திருந்ததை அறிந்திருந்தும், இஸ்ரேல் சென்ற அவர், அங்கு தனது ‘உயரிய தார்மீக கோழைத்தனத்தை’ வெளிக்காட்டியதாகவும் சாடியுள்ளது. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக PM மோடி கூறியது வெட்கக்கேடானது என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

News February 28, 2026

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை!

image

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாதே & புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஈரான் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. ஈரானின் உச்சத்தலைவர் கமேனி, உயர் ராணுவ மற்றும் அரசியல் பிரமுகர்களை குறிவைத்து தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

error: Content is protected !!