News February 25, 2026

ஊழியர்களுக்கு லீவை வாரி வழங்கும் நெதர்லாந்து

image

இந்தியாவில் ஊழியர்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும் விடுப்பு எடுக்க முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்திக்கின்றனர். ஆனால், நெதர்லாந்து அரசு, ஊழியர்களுக்கு அருமையான சலுகையை வழங்கி வருகிறது. ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டால், 70% சம்பளத்துடன் 2 ஆண்டுகள் வரை மருத்துவ விடுப்பு வழங்கப்படுகிறது. இதற்கு நெட்டிசன்கள், இந்தியாவில் இதற்கு வாய்ப்பில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar News

News February 28, 2026

விஜய்க்கு இப்போதும் சங்கீதாதான் மனைவி

image

விவாகரத்துக்கோரி மனைவி சங்கீதா வழக்குத் தொடர்ந்ததால், விஜய் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் வருமா என கேள்வி எழுந்தது. ஆனால், தீர்ப்பு வரும் வரை, விஜய்க்கு சங்கீதாதான் சட்டப்படி மனைவி. தேர்தலுக்குள் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வர வாய்ப்பில்லை என்பதால், விஜய் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது மனைவி என்ற அடிப்படையில் சங்கீதாவின் அனைத்து விவரங்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

News February 28, 2026

Truecaller-ல் உங்கள் பெயர் காட்டக்கூடாதா? இதோ டிரிக்ஸ்

image

Truecaller-ன் காலர் லிஸ்டில் இருந்து உங்கள் பெயரை நீக்க முடியும் ➤இதற்கு www.truecaller.com இணையதளத்துக்கு செல்லுங்கள் ➤இதில் ‘i want to unlist’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள் ➤நம்பரை உள்ளிட்டால் உங்கள் Contact Truecaller-ன் தரவுகளில் இருந்து நீங்கிவிடும். ஒருவேளை உங்கள் போன் நம்பர் வேறு ஒருவரின் பெயரில் இருந்தால், அதனை Change My Name என்ற ஆப்ஷன் மூலம் மாற்றலாம். SHARE.

News February 28, 2026

மாம்பழம் சின்னத்தை முடக்குங்கள்: ராமதாஸ்

image

பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் ECI-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக அங்கீகாரமற்ற கட்சி என்பதால், இதில் பதவியில் இருப்பவரின் காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ECI-க்கு இல்லை என்றும், இருதரப்பினரிடையே உள்ள பிரச்னை தீர்க்கப்படும் வரை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கட்சி யாருக்கு என ராமதாஸ் – அன்புமணி இடையே போராட்டம் நடந்து வருகிறது.

error: Content is protected !!