News May 12, 2024
மூன்றாவது முறையாக சாலையில் ஏற்பட்ட பள்ளம்

திருச்சி, ஸ்ரீரங்கம், காந்தி சாலையில் மூன்றாவது முறையாக இன்று திடீரென பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
Similar News
News September 3, 2025
திருச்சி: 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு

திருச்சி 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில், மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை (செப்.4) முதல் செப்.,15-ம் தேதி வரை புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. அடிப்படை மருத்துவ அறிவு, எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு 91500 84161 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News September 3, 2025
திருச்சி: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

திருச்சி மக்களே..சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.
News September 3, 2025
திருச்சி: அதிக பயணிகளை கையாண்டு சாதனை

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமான சேவைக்கு போட்டியாக ஏர் இந்தியா நிறுவனமும் சேவை அளித்து வருகிறது. இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரே நாளில் உள்நாடு மற்றும் வெளிநாடு என 7293 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இரண்டாவது முறையாக எட்டப்பட்டுள்ளதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.