News February 25, 2026
புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

புதுச்சேரிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்கள் (UAV) மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மீறுவோருக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Similar News
News February 28, 2026
புதுச்சேரி விமான நிலையம் முன்பு போலீசார் குவிப்பு

பிரதமர் மோடி நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். சென்னையில் இருந்து புதுச்சேரி விமான நிலையம் வரும் அவர் லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் இன்று விமான நிலையம் முன்பு போலீசார் தீவிர பாதுகாப்பு பணி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
News February 28, 2026
புதுச்சேரி: பெண்களுக்கு தடுப்பூசி திட்டம் தொடக்கம்

இந்திய அரசின் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 14 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்களுக்கு நாடு முழுவதும் எச்.பி.வி. (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைப் பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் ஆளுநர் கைலாசநாதன் அரசுப் பள்ளி மாணவிகளுக்குத் தடுப்பூசி செலுத்தி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
News February 28, 2026
புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <


