News February 25, 2026
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 26.02.2026 காலை 10.30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வங்கி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
பழனி அருகே ‘பெண் பலி’ சிற்பம் கண்டுபிடிப்பு

பழனி அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பெண் (திருநங்கை) பலி’ சிற்பத்தை ஆய்வாளர் நாராயணமூர்த்தி கண்டறிந்தார். பாழடைந்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இச்சிற்பம், 1 திருநங்கை தனது தலையை தானே அறுத்து கடவுளுக்கு பலியிட்டு கொண்டதை சித்தரிக்கிறது. விலங்குகளை பலியிடும் வழக்கத்திற்கு மாறாக, இத்தகைய மனிதப் பலி மற்றும் திருநங்கை தொடர்பான வரலாற்றுச் சான்று தொல்லியல் ஆர்வலர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 1, 2026
திண்டுக்கல்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.
News March 1, 2026
திண்டுக்கல்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


