News May 12, 2024
இரவு 10 மணி வரை மழை பெய்யக் கூடும்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். மழை காரணமாக தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 14, 2026
பாஜக வேட்பாளர்கள் யார் யார்? பாஜக இன்று ஆலோசனை

இன்று காலை பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பாஜக தேர்தல் மேலாண்மைக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து, வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன்பின், தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் லிஸ்டை அமித்ஷாவிடம் கொடுத்து இறுதி செய்யும் பணி தொடங்கும் என கூறப்படுகிறது.
News February 14, 2026
சிறப்பு மகளிர் உரிமை தொகை ₹5000.. வெடித்தது சர்ச்சை

ஊதிய உயர்வு கோரி, தூய்மைப்பணியாளர்கள் முதல் ஆசிரியர்கள் வரை போராட்டம் நடத்தினால் நிதியில்லை திமுக அரசு கூறுகிறது. ஆனால், ஒரே நாளில் சிறப்பு மகளிர் உரிமைத் தொகை ₹5000 வரவு வைக்க மட்டும் எப்படி நிதி வந்தது என கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஆதி திராவிடர் * பழங்குடியினருக்கு ஒதுக்கிய நிதியை, மகளிர் உரிமைத் திட்டத்திற்கு திமுக அரசு செலவழித்ததாக RTI தகவலை சுட்டிகாட்டி பலரும் விமர்சிக்கின்றனர்.
News February 14, 2026
கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கும் திமுகவா?

2021-ல் கூட்டணி கட்சிகளின் 15 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது உட்பட திமுக 188 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை கூட்டணி கட்சிகள் கூடுதல் கேட்டு அழுத்தம் கொடுக்கின்றன. இந்நிலையில், 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால், கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க திமுக முடிவு எடுத்துவிட்டதா என கேள்வி எழுகிறது.


