News May 12, 2024
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை

தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. சொத்து வரி, மின்சாரக் கட்டணம் உயர்வு என மக்களுக்கு துன்பத்தை மட்டுமே திமுக அரசு வழங்கியிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Similar News
News February 20, 2026
தவெக கூட்டணியில் சேர தடை வருகிறது: செங்கோட்டையன்

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது என்பது அவர்களது விருப்பம். எங்கிருந்தாலும் வாழ்க என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட அவர், தவெக கூட்டணியை பொறுத்தவரை விஜய் தான் முடிவு செய்வார் என்றும், தவெக கூட்டணிக்கு வரும் கட்சிகளின் பெயரை வெளிப்படையாக சொல்ல முடியாது, அப்படி சொன்னால் அக்கட்சி கூட்டணியில் சேர்வதற்கு தடை வருகிறது எனவும் கூறியுள்ளார்.
News February 20, 2026
வெள்ளி விலை 10 நாள்களில் ₹60,000 குறைந்தது

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹640 குறைந்தாலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் 1 கிராம் ₹270-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், பிப்.11 – 20 வரையிலான 10 நாள்களில் 1 கிராம் ₹60-ம், 1 கிலோ ₹60,000 குறைந்துள்ளது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மனமகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாள்களிலும் விலை குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
News February 20, 2026
அமைச்சர் KN நேரு மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

அமைச்சர் KN நேரு மீது உடனடியாக FIR பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை HC உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு நடந்ததாக டிஜிபிக்கு ED கடிதம் எழுதியிருந்தது. அதன் அடிப்படையில் KN நேரு மீது FIR பதிவு செய்யக்கோரிய அதிமுக MP இன்பதுரையின் மனு மீது தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி வழக்கில் சிக்கி சிறை சென்றிருந்தார்.


