News February 24, 2026
சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த <
Similar News
News February 26, 2026
சென்னையில் துடிதுடித்து பலி

தண்டையார்பேட்டை, கார்டன் மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(56). பெயின்டரான இவர் ஜெயராஜ் என்பவரின் வீட்டில், பெயின்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். முதல் மாடியில் உள்ள பால்கனியில், நாற்காலியின் மீது ஏறி நின்று பெயின்ட் அடித்து கொண்டிருந்தபோது, கால் இடறி தரையில் விழுந்தவர், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 26, 2026
சென்னையில் துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்!

சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்து சென்ற 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை வெறிநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்ததால் காயமடைந்துள்ளனர். சூளை பள்ளத்தை சேர்ந்த பிரதீப் (25), சஞ்சய் காந்தி காலனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (55), 2 சிறுவர்களை நாய் கடித்தது. அவர்களுக்கு ரேபிஸ் ஊசி செலுத்தப்பட்ட நிலையில், வெறிநாயை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News February 26, 2026
சென்னையில் இன்று மின்தடை!

சென்னையில் இன்று (பிப்.26) மாங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எஸ்.எஸ்.கோவில் தெரு, யூபி கோவில் தெரு, மாங்காடு பிரதான சாலை, பட்டூர் பஜார், பாலன்டேஸ்வரர் கோவில் தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யு, நியூ காமாட்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.


