News February 24, 2026

ஒரே நாளில் 2 முறை திருமணம் செய்யும் VD – ரஷ்மிகா ஜோடி

image

விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம் வரும் 26-ம் தேதி உதய்பூரில் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெறுகிறது. காலை தெலுங்கு சடங்குகளின்படியும், மாலை கொடுவா (கர்நாடகா) சடங்குகளின்படியும், 2 முறை திருமணம் நடைபெற உள்ளது. பின்னர், மார்ச் 3-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்கள் பங்கேற்கும் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறகிறது.

Similar News

News April 7, 2026

பாகிஸ்தானில் லாக்டவுன்.. முதல் நாடாக அறிவித்தது

image

மேற்காசிய போர் பதற்றத்தால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், PM ஷெபாஸ் ஷெரிஃப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இன்று முதல் பகுதியளவு பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடைகள், வணிக வளாகங்கள் இரவு 8 மணியுடன் மூட வேண்டும். ஹோட்டல்கள், திருமண அரங்குகள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

BREAKING: கடைசி நேரத்தில் அதிமுகவுடன் இணைந்தார்..

image

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். மதிமுக மாநில நிர்வாகிகளில் மிகவும் முக்கியமானவரும், வைகோவுக்கு வலதுகரமாக இயங்கி வந்தவருமான முருகனின் விலகல் அக்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக ஆடுதுறை முருகன் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில், வாய்ப்பு வழங்காததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 7, 2026

செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தம்

image

கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனையை அதிமுக வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் மற்றும் வழக்கு விவரங்கள் புதிதாக கட்டப்படும் வீடு ரோட்டரி லைசன்ஸ் காலாவதியானது போன்ற காரணங்களால் 5 மணி வரை வேட்பு மனு பரிசீலனை நிறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!