News February 24, 2026
நல்லகண்ணுவுக்கு அதி தீவிர சிகிச்சை

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவரும் CPI மூத்த தலைவர் நல்லகண்ணுவின்(101) உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவருக்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஹாஸ்பிடல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. HIGH BP, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை உள்ளிட்ட பிரச்னைகளால் அவர் அவதிப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 27, 2026
கர்ப்பிணிகளுக்கு ₹11,000 வழங்கும் அரசு திட்டம்

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <
News February 27, 2026
தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டும் தவெக

தேர்தலையொட்டி, மார்ச் 1-ல் தவெகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் நடைபெறும் இக்கூட்டத்தில், தேர்தல் பரப்புரை, வாக்குச்சாவடி முகவர்களின் பணி உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பார்கள், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல்வேறு அணியினர் தவறாமல் பங்கேற்குமாறு புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
News February 27, 2026
பிரதமர் மோடி பதவி விலகல்.. Factcheck

PM மோடியை பதவி விலகுமாறு SC உத்தரவிட்டுள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB Factcheck) விளக்கம் அளித்துள்ளது. அதில், இதுபோன்ற எந்த உத்தரவையும் SC பிறப்பிக்கவில்லை; இது பொய்யான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை தகவல்களை அறிந்து கொள்ள, 8799711259 வாட்ஸ்ஆப் எண், factcheck@pib.gov.in மெயிலில் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


