News February 24, 2026

பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு.. ₹3 லட்சம் கோடி காலி

image

இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1068 புள்ளிகள் சரிந்து 82,225 ஆகவும், நிஃப்டி 276 புள்ளிகள் சரிந்து 25,424 ஆகவும் வர்த்தகம் முடிவடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, ஐடி பங்குகளின் விற்பனை அதிகரிப்பு, உலகளாவிய சந்தைகளில் ஏற்ற இறக்கம், கச்சா எண்ணெய் விலையில் எழுச்சி ஆகியவை சரிவுக்கு காரணம். இன்று ஒரேநாளில் ₹3 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர்.

Similar News

News February 27, 2026

ஒரு மாதத்தில் வெள்ளி விலை ₹60,000 வரை குறைந்தது

image

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹160 குறைந்தாலும், வெள்ளி விலை 3 நாள்களாகவே மாற்றமின்றி 1 கிராம் ₹295-க்கே விற்பனையாகிறது. அதேநேரம், இம்மாதத்தில் 1 கிராம் ₹320 வரை உச்சம் தொட்ட வெள்ளி விலை, இடையில் ₹260 வரை குறைந்தது. அதாவது, 1 கிலோ வெள்ளி ஒரு மாதத்தில் மட்டும் ₹60,000 வரை குறைந்து, ₹35,000 அதிகரித்துள்ளது. இந்த ஏற்ற இறக்கம் மார்ச் மாதத்திலும் தொடரும் என கூறப்படுகிறது.

News February 27, 2026

ஊழல் வழக்கில் இருந்து கெஜ்ரிவால் விடுவிப்பு!

image

மதுபான ஊழல் வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியவை டெல்லி கோர்ட் விடுவித்துள்ளது. எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாமல் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறிய நீதிமன்றம், விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாக CBI-ஐ கடுமையாக சாடியது. அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்த்து இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 23 பேரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

News February 27, 2026

நான் சொன்னதும் விஜய் செய்தார்: EX அமைச்சர்

image

தான் கூறியதற்கு பிறகே வேலூர் தவெக கூட்டத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டது என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அதேநேரம், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு தமிழக அரசு நெறிமுறைகள் வகுத்தது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், திமுக அரசுக்கு ஆதரவாக சீனிவாசன் பேசியது பேசுபொருளாகியுள்ளது

error: Content is protected !!