News February 24, 2026

விழுப்புரம்: வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா?

image

விழுப்புரம் வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த லிங்கில் <>க்ளிக் <<>>செய்து, உங்கள் பெயரை சேர்க்கலாம். தகவலுக்கு 180042521950 அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 3, 2026

விழுப்புரம் கலெக்டர் ஆபிசில் குவிந்த மனுக்கள்!

image

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதியோர் உதவிதொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவிதொகை, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 620 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது விசாரணை செய்து உடனடி தீர்வு காண வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News March 3, 2026

விழுப்புரம்: புதிய யுக்தியை கையில் எடுத்த தவெக-வினர்!

image

திண்டிவனத்தில் தவெக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் மண்டல இணை கண்காணிப்பாளர் அன்பரசன் கலந்து கொண்டு, ”ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து, களத்தில் இறங்கி செயல்பட்டு அதனை தீர்க்க வேண்டும். இதனை ஒவ்வொரு நிர்வாகியும் முறையாக செய்தால் விஜய்யை முதலமைச்சராக்க முடியும்” என கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்!

News March 3, 2026

விழுப்புரத்தில் கார் மோதி பரிதாப பலி!

image

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (73); இவர், நேற்று முன்தினம் பண்ருட்டி-மடப்பட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற கார், கேசவன் மீது அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கேசவன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!