News February 24, 2026
‘அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்’.. TTV உறுதிபட தெரிவித்தார்

யாருடன் கூட்டணி என்பதை தெளிவுபடுத்தாமல் இருக்கும் சசிகலா, OPS இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என கூறப்படுகிறது. இந்த சூழலில், சசிகலா, OPS இருவரும் பாஜக கூட்டணிக்கு வருவார்கள் என்று TTV உறுதிபட தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% பேர் ஒன்றாக இணைந்துள்ளோம்; மீதமுள்ளவர்களும் அதிமுக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள் என TTV கூறியுள்ளார்.
Similar News
News February 26, 2026
விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம் முடிந்தது

நடிகர் விஜய் தேவரகொண்டா & நடிகை ரஷ்மிகாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. உதய்பூர் மாளிகையில் காலை 10:10 மணிக்கு ரஷ்மிகாவின் கழுத்தில் விஜய் தேவரகொண்டா 3 முடிச்சுகளை போட்டுள்ளார். நெருங்கிய நண்பர்கள் & உறவினர்கள் முன்னிலையில் மிகவும் Private நிகழ்ச்சியாக இந்த திருமணம் நடந்துள்ளது. அதே நேரத்தில், <<19228143>>இன்று மாலை ‘கொடுவா’ சமூக முறைப்படி<<>> மீண்டும் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 26, 2026
BIG FLASH: தவெகவில் புதிய கட்டுப்பாடு

தலைமையின் அனுமதி இல்லாமல் TV, Youtube சேனல்களுக்கு தவெக நிர்வாகிகள் நேர்காணல் வழங்கக் கூடாது என புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். பொதுவெளியில் நடத்தப்படும் TV விவாதங்கள் (அ) ஊடகங்களுக்கு நேரடி பேட்டிகள் கொடுக்க முன் அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தவெகவினர் சிலர் TV-க்களுக்கு அளித்த பேட்டிகள் இணையத்தில் டிரோல் செய்யப்பட்ட நிலையில், இந்த அதிரடி உத்தரவு வெளியாகியுள்ளது.
News February 26, 2026
நாளை பேச்சுவார்த்தை இல்லை: நயினார்

மார்ச் 1-ம் தேதிக்கு பிறகே NDA-வில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை பியூஷ் கோயல் தமிழகம் வரவில்லை எனவும், EPS உடன் கலந்து பேசிவிட்டு பேச்சுவார்த்தைக்கான நாளை பாஜக முடிவு செய்யும் என்றும் கூறினார். கூட்டணியை இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே பேச்சுவார்த்தை இழுபறிக்கு காரணம் என கூறப்படுகிறது.


