News February 24, 2026

கடலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 27, 2026

கடலூர் மாவட்டத்தில் 18,919 டன் உரம் இருப்பு- ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,558 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 2,242 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,810 மெட்ரிக் டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 7,853 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,457 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 18,919 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால் தேவைப்படும் விவசாயிகளுக்கு உரம் தடையின்றி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News February 27, 2026

கடலூர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

கடலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 27, 2026

கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!