News February 24, 2026

குமரியில் டிரோன்கள் பறக்க தடை

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்றும், நாளையும் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும், நாளையும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்க விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 26, 2026

குமரி: அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு தாக்கல்

image

கோவில்பட்டியை சேர்ந்த நீதிபாண்டியன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அமைச்சர் மனோதங்கராஜ் பகிர்ந்த ஒரு வீடியோ பிரதமரை அவதூறாகவும், அவமதிக்கும் வகையில் உள்ளதால் அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

News February 26, 2026

குமரி: தவறாக அனுப்பிய பணத்தை இனி திரும்பப் பெறலாம்

image

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News February 26, 2026

குமரி: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

image

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

error: Content is protected !!