News February 24, 2026

ஈரோடு: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 27, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098.

News February 27, 2026

ஈரோடு: துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது!

image

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணிக்கு சென்றபோது கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும், சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணமூர்த்தி என்பதும் மானை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்கு வந்ததாக கூறியுள்ளனர். அவர்களை கைது செய்த வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

News February 27, 2026

ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!