News February 24, 2026

ஓசூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை

image

ஓசூர் அடுத்த ராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராணி, இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே பிப்-22 குடும்ப பிரச்னை காரணமாக கணவர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் மனமுடைந்த ராணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 4, 2026

கிருஷ்ணகிரி: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 4, 2026

கிருஷ்ணகிரியில் அதிரடி காட்டிய ஆட்சியர்!

image

ஓசூரில் இராமநாயக்கன் ஏரி அருகே சுமார் 582 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் நேற்று (மார்ச்-3) ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News March 4, 2026

கிருஷ்ணகிரியில் தட்டி தூக்கிய பாஜக!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தெற்கு மண்டல தலைவர் மூர்த்தி தலைமையில் நேற்று 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர். ஆதிதொட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாற்று கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!