News February 24, 2026
ஈரோடு: பேத்தியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாத்தா கைது!

ஈரோடு அருகே 3 வயது சிறுமியின் தந்தை வழி தாத்தா கந்தசாமி, அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. வேலை முடிந்து வீடு திரும்பிய தாய் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைக் கண்டு விசாரித்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 1, 2026
ஈரோட்டில் இழந்த பணம்: வட்டியுடன் வழங்கல்!

பவானியில் ‘சன் மைக்ரோ பைனான்ஸ்’ மூலம் கடன் தருவதாகக் கூறி முன்பணம் பெற்று மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 20 பேருக்குப் பணம் மீட்டுத் தரப்பட்டுள்ள நிலையில், மற்ற பயனாளிகளும் உரிய ஆதாரங்களுடன் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என டி.எஸ்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 94981 72888 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
News March 1, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! முக்கிய தகவல்

ஈரோடு மாவட்டத்தில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு, மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே வந்து விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை தகுதியுடைய பயனாளிகள் பயன்படுத்தி சிரமமின்றிப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். SHARE IT
News March 1, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.28) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


