News February 24, 2026

அதிமுகவில் இணைந்த ஆதரவாளர்கள்.. OPS அதிர்ச்சி

image

OPS-ன் கோட்டையான தேனியில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 400 பேர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், OPS-ன் தீவிர ஆதரவாளரான செயற்கை சந்திரன் தலைமையில் இணைந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. அதேபோல், நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த மகளிரணி, மாணவரணி, அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர்கள் அதிமுகவில் இணைந்துள்ளது OPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Similar News

News March 3, 2026

விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி

image

இண்டிகோ நிறுவன விமான பணிப்பெண்ணிடம் திமுக நிர்வாகி பாலியல் ரீதியில் அத்துமீறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25-ம் தேதி, சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் வைத்து 25 வயது பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் பிரபாகரனும் அவரது நண்பரும் அத்துமீறியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

News March 3, 2026

பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா?

image

இஸ்ரேல், US-ன் தாக்குதலை அடுத்து ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அதன் வழியாகவே இந்தியாவுக்கு 40% கச்சா எண்ணெயும், 60% LPG-யும் கப்பலில் வருகின்றன. இந்நிலையில் ஈரானின் தடையால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அச்சம் எழுந்தது. எனினும் அடுத்த 25 நாள்களுக்கு கச்சா எண்ணெய் & 30 நாள்களுக்கான LPG-யும் கையிருப்பில் உள்ளதால், பெட்ரோல் டீசல் விலை உயராது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News March 3, 2026

நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறையாகும். இதேபோல், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாளாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT

error: Content is protected !!