News February 24, 2026
திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

முசிறி அருகே தேவனூரை சேர்ந்த தம்பதியினர் விஜய், ஆர்த்தி. இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் ஆர்த்தி கோபித்துக் கொண்டு சூரம்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சூரம்பட்டி வந்த விஜய், ஆர்தியிடம் தகராறு செய்து அறிவாளால் கொடுரமாக வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த ஆர்த்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த முசிறி போலீசார் விஜய்யை கைது செய்தனர்.
Similar News
News March 1, 2026
திருச்சி: லஞ்சம் பெற்ற வழக்கில் மின் பொறியாளர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி மின் பொறியாளர் ராஜு விவசாய நிலத்திற்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.3000 லஞ்சம் கேட்க, அதைக் கொடுக்க விரும்பாத, கோம்பையைச் சேர்ந்த முத்து என்பவர் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச கண்காணிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரிடம் புகார் கொடுத்த நிலையில், நேற்று ராஜு கையூட்டு பெற்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
News February 28, 2026
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <
News February 28, 2026
துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் தரையிறக்கம்

திருச்சியில் இருந்து 145 பயணிகளுடன் இன்று பிற்பகல் 1.12 மணிக்கு துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஈரான் நாட்டில் நிலவும் போர் பதற்றம் காரணமாக திருப்பி அனுப்ப கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


