News May 12, 2024
சீன ஆக்கிரமிப்பிலுள்ள இந்திய நிலப்பகுதியை மீட்போம்

INDIA கூட்டணி அரசு அமைந்ததும், சீனா ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய நிலப்பகுதி அனைத்தும் மீட்கப்படும் என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த கெஜ்ரிவால், இந்திய நிலப்பகுதிகளை சீனா அதிக அளவில் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், ஆனால், இந்த உண்மையை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு ஒப்புக் கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News August 22, 2025
அரசியல் கூட்டம் அல்ல, நடிகரை பார்க்க வந்த கூட்டம்: தமிழிசை

TVKவின் 2-வது மாநில மாநாட்டில் விஜய் பேசுகையில், கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக எனவும் தெரிவித்தார். இதுபற்றி பேசிய தமிழிசை, விஜய்யின் மாநாடு அரசியல் கூட்டம் போல் இல்லை என்றும், ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம் போல் உள்ளதாகவும் கூறினார். கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய், தனது கொள்கையை கூறவில்லை என்றும், பாஜகவை விமர்சிக்கும் விஜய் காங்கிரஸை விமர்சிக்காதது ஏன் எனவும் கேட்டார்.
News August 22, 2025
அதிக வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர்கள்

கிரிக்கெட்டில் வருடந்தோறும் எத்தனையோ இளம் வீரர்கள் அறிமுகமானாலும், சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக பல வருடங்கள் காத்திருந்து சில வீரர்களும் விளையாடி உள்ளனர். அப்படி அறிமுகமான வீரர்களின் புகைப்படங்களை மேலே கொடுத்துள்ளோம். அதனை Swipe செய்து பார்க்கவும்.
News August 22, 2025
ரேஷன் கார்டில் இனி பொருள்கள் வாங்க முடியாதா?

ஏழைகளுக்கு மானிய விலை உணவு தானியத்துடன், 5 கிலோ இலவச தானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வசதியான பலரும் இச்சலுகை பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். இதனை கண்டறிந்து நீக்கும் வகையில், வருமானவரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட வசதியானோரின் பெயர்களை கண்டறிந்து நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பலரின் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.