News February 24, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (பிப்.23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2026
செங்கல்பட்டு: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

செங்கல்பட்டு மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -044-27428840, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News February 25, 2026
செங்கல்பட்டு: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் போதும், இ-சேவை மையத்தில் அல்லது செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 9487161105, 044-26426421 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
News February 25, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தயாளன் (48), மேல்மருவத்தூர் அருகே செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் நோக்கி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, திருச்சி மார்க்கத்தில் இருந்து வந்த அதிவேக ரயில் மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


