News February 24, 2026

மதுரை மாநகர காவல் இரவு நேர ரோந்து அதிகாரிகள்

image

மதுரை மாநகரில் காவல்துறையின் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி துணை ஆணையர் அசோகன் தெற்கு பகுதிகளிலும், துணை ஆணையர் செல்வின் வடக்கு பகுதிகளிலும் தலைமை ஏற்று ரோந்து பணிகளை கண்காணிப்பர். மேலும் சரக காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோந்து இடங்களில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2026

FLASH மதுரை: மின்சாரம் தாக்கி தந்தை & மகன் பலி

image

வாடிப்பட்டி, நாராயணபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி(79). இவரது மகன் அரசு பஸ் டிரைவர் ஆதிநாராயணன்(55) இவரது தம்பி மகன் கல்லூரி மாணவர் கிருஷ்ணன்(20). 3 பேரும் தோட்டத்தில் மாட்டு தீவனம் சேகரித்த போது மின்சார வயர் அறுந்து கிருஷ்ணனின் மேல் விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற மற்ற இருவர் உள்பட 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் ஆதிநாராயணன் & கிருஷ்ணன் பலியாயினர். சின்னதம்பி சிகிச்சையில் உள்ளார்.

News March 6, 2026

மதுரை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 6, 2026

மதுரை: 710 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

image

பிளஸ் டூ தேர்வு மார்ச் 2ம் தேதி ஓங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கிலம் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 16,471 மாணவர் 18,033 மாணவியர் உள்பட மொத்தம் 34,504 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வை 16,069, மாணவர் 17,725 மாணவியர், மொத்தம் 33,794 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 544 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

error: Content is protected !!