News May 12, 2024

மெட்டல் டிடெக்டர் மூலம் அதிகாரிகள் ஆய்வு

image

நெல்லை மாவட்டம் திசையன்விளை கரைச்சுத்து புதூரில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் இன்று (மே.12) தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று அங்கு டார்ச்லைட் கிடைக்கப் பெற்ற நிலையில் இன்று 10 பேர் கொண்ட தடவியல் துறை அதிகாரிகள் குழு அவர் பிணமாக மீட்கப்பட்ட பகுதியில் வேறு எதுவும் தடயங்கள் உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

Similar News

News December 31, 2025

நெல்லையில் 16 ரவுடிகள் அதிரடி கைது!

image

2026 புத்தாண்டு இன்று இரவு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை மாநகர் மற்றும் மாவட்டப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்தியுள்ளனர். இதில் 1345 ரவுடிகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். மேலும் மாநகரில் 10 ரவுடிகளும், மாவட்டத்தில் 16 ரவுடிகளும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு இரவு ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

News December 31, 2025

நெல்லையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின் மகன் தமிழரசன்(25) என்பவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் உத்தரவை அடுத்து அவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!