News May 12, 2024
விலை உயர்ந்த புதிய ரக வாழைப்பழம் அறிமுகம்

ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான புதிய ரக வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். ‘மோங்கீ’ என பெயரிடப்பட்டுள்ள அந்த வாழைப்பழங்கள், மிகவும் சுவையாக இருப்பதுடன், அதன் தோலையும் சாப்பிட முடியும். அன்னாசிப் பழத்தின் சுவையை நினைவூட்டும் இந்த வாழைப்பழம், இந்திய மதிப்பில் ₹362க்கு விற்பனையாகிறது. மிகக் குளிர்ந்த பிரதேங்களில் விளைவதால், இந்த பழங்களுக்கு பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதில்லை.
Similar News
News September 17, 2025
IND-ஐ எதிர்கொள்ளும் டெஸ்ட் படையை அறிவித்த WI

IND vs WI மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் வரும் அக்., 2 முதல் 14-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான, 15 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆஸி., உடனான சமீபத்திய தோல்வியை அடுத்து, அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரபால், அலிக் அதனாஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். சுழல் பந்து வீச்சாளரான கேரி பியர்ரி புதிதாக அறிமுகமாக உள்ளார்.
News September 17, 2025
ராகுலை புகழ்ந்த EX பாக்., வீரர்: பாஜக விமர்சனம்

ராகுல் காந்தியை EX பாக்., கிரிக்கெட் வீரர் <<17729515>>அஃப்ரிடி<<>> பாராட்டியதை பாஜக விமர்சித்துள்ளது. பாகிஸ்தானின் செல்லப் பிள்ளையாக ராகுல் மாறிவிட்டதாகவும், அந்த மக்கள் அவரை தலைவராக ஏற்க கூட தயக்கம் காட்ட மாட்டார்கள் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சாடியுள்ளார். இதற்கு, அஃப்ரிடியுடன் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாகூர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காங்., பதிலடி கொடுத்துள்ளது.
News September 17, 2025
பெரியார் பொன்மொழிகள்

*மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. *பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு. *தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும். *ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அதேபோல் மற்றவர்களிடமும் அவன் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். *கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.