News February 23, 2026

புதுச்சேரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://<>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

Similar News

News February 25, 2026

புதுவை: கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலத்த காயம்

image

தவளக்குப்பம் அருகிலுள்ள நல்லவாடு வடக்குத்தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (28) தலைமையில் 5 பேர் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக எழுந்த பெரிய அலையில் படகு கவிழ்ந்து, அனைவரும் கடலில் விழுந்துள்ளனர். இதில் சதீஷ் என்பவர் பலத்த காயம் அடைந்தார். மற்றவர்கள் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர். இது குறித்து தவளக்குப்பம் போலீசார் மற்றும் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 25, 2026

புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

image

புதுச்சேரிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆளில்லா விமானங்கள் (UAV) மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மீறுவோருக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!