News February 23, 2026

நண்பனுக்கு உதவச்சென்று ₹7 கோடி மோசடியில் சிக்கிய நபர்!

image

பெங்களூருவில் கெஞ்சி உதவிக்கேட்ட நண்பனுக்காக தனது வங்கி கணக்கு எண், பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஒருவர் வழங்கியுள்ளார். ஆனால் அடுத்த சில நாள்களில் ₹7 கோடி ஆன்லைன் மோசடிக்காக அவரது வங்கி கணக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவரது வீட்டுக்கு தபால் சென்றது. அதில் ஷாக் ஆன அவர் தற்போது சைபர்கிரைமில் புகார் அளித்துள்ளார். இப்படி செய்தால் யாரைதான் நம்புவது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Similar News

News February 27, 2026

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்

image

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் பதற்றம். பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தலிபான்கள் எல்லையில் உள்ள 15 சோதனை சாவடிகளை கைப்பற்றியதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல் 40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். நடந்து வரும் எல்லை மோதல்கள் இருநாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

News February 27, 2026

ஓட்டுநர் உரிம முறையில் மாற்றங்கள்..!

image

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த கிரேடு அடிப்படையிலான ஓட்டுநர் உரிம முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிவேகம், மது போதையில் ஓட்டுதல் போன்ற காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் 1.8 லட்சம் பேர் இறக்கின்றனர். எனவே, விரைவில் புதிய முறையை கொண்டுவருவோம் என்றும் போக்குவரத்து விதிகளை மீறினால் பாயிண்ட்ஸ் குறைக்கப்பட்டு வரும் என்றும் மத்திய அமைச்சர் கட்கரி கூறியுள்ளார்.

News February 27, 2026

இனி கூகுள் மேப் வழிகாட்டும்!

image

ஆதார் மையங்களை கூகுள் மேப்பில் காண்பிக்க UIDAI கூகுள் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. பெயர் சேர்க்கை அல்லது தகவல் புதுப்பிப்பு போன்ற சேவைகளுக்கு நாடு முழுவதும் உள்ள 60,000க்கும் மேற்பட்ட ஆதார் மையங்களை எளிதாக அடையாளம் காண இந்த முயற்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்பில் பயனர்கள் தேடும்போது, அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களுக்கு செல்வதை இந்த வசதி உறுதி செய்யும்.

error: Content is protected !!