News February 23, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை, குறைந்த செலவில் நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களை பதிவிட இப்போதே இந்த <
Similar News
News March 1, 2026
மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் வளர்ச்சி: PM

மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதற்கு புதுச்சேரியே உதாரணம் என PM மோடி பேசியுள்ளார். புதுச்சேரியில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர், இரட்டை இன்ஜின் அரசுகள் புதுச்சேரிக்கு மேலும் மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் உள்ள இரட்டை இன்ஜின் அரசாங்கம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவதாகவும் அவர் பேசியுள்ளார்.
News March 1, 2026
கடுமையாக தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல், USA தாக்குதலில் உயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டதால் மிக கடுமையாக தாக்குதல் நடத்தி பழிவாங்கப் போவதாக ஈரான் கூறியுள்ளது. இந்நிலையில் ஈரானுக்கு வார்னிங் கொடுக்கும் விதமாக பேசிய டிரம்ப், ஈரான் பதில் தாக்குதல் நடத்தாமல் இருப்பது நல்லது என கூறியுள்ளார். இதை மீறியும் ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், இதற்கு முன் பார்க்காத அளவுக்கு பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News March 1, 2026
பிரேமலதா முடிவு.. திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இன்னும் தேமுதிக அழைக்கப்படவில்லை. இதனிடையே, 6+1 என கேட்ட பிரேமலதாவிடம், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட்களைப் பொறுத்து 8 வரை கொடுப்பதாக ஸ்டாலின் உறுதியளித்தாராம். அதேநேரம், பிரேமலதா அளித்த தொகுதிப் பட்டியலை அறிந்து, ஏற்கெனவே அங்கு காய் நகர்த்திவரும் திமுக & அதன் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனராம். உங்கள் கருத்து என்ன?


