News May 12, 2024
குத்தாலத்தில் காவடி எடுத்து அசத்திய 2 வயது பாலகன்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாடுதுறையில் அருள்மிகு வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய பால்குடத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது இரண்டு வயதுடைய ரோகித் என்ற பாலகன் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய நிகழ்வு காண்போரை பக்தி பரவசமடைய செய்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
Similar News
News November 28, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக 28,29 மற்றும் 30 தேதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நீர் நிரம்பியுள்ள நீர் நிலைகளில் குளிப்பதையும் கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் தவிர்க்க வேண்டும். ஆடு மாடுகளை மின்கம்பத்தில் கட்ட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
News November 28, 2025
மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!


