News February 23, 2026

கோவை கலெக்டர் அறிவிப்பு

image

கோவை கலெக்டர் பவன்குமார் விடுத்துள்ள அறிக்கையில், தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் இலவச சூரிய மின்னழுத்த தொழில்நுட்பப் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. NSDC அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் வழங்கப்படும் இப்பயிற்சி, இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். தகுதியும், ஆர்வமுள்ளவர் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Similar News

News February 25, 2026

BREAKING: கோவையில் வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை வழக்கறிஞர்கள் பயிற்சி மையத்திற்கு இன்று வந்த மின்னஞ்சலில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்த போலீசார், மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின், இது வெறும் மிரட்டல் புரளி என்பது உறுதியானது.

News February 25, 2026

கோவை: பட்டா, சிட்டா இனி ஆன்லைனில்!

image

பட்டா மாற்றம் & நில அளவீடு: tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள் பதிவிறக்கம்: பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் (FMB) பெற eservices.tn.gov.in தளத்தைப் பயன்படுத்தலாம்.

வரைபடங்கள்: கிராம வரைபடம் மற்றும் நில அளவை எண் விவரங்களுக்கு tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை அணுகலாம். மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 25, 2026

கோவை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!