News February 22, 2026
காங்கிரஸுக்காக விஜய் காத்திருக்கிறார்: குஷ்பு

தன்னை யாராவது சேர்த்துக் கொள்வார்களா என முயன்று வரும் OPS-ஐ பார்த்தால் பாவமாக உள்ளதாக குஷ்பு கூறியுள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது அவர்களது விருப்பம், ஆனால் விஜயகாந்த் இருந்திருந்தால் இக்கூட்டணி அமைந்திருக்காது என்றார். திமுக – காங்., கூட்டணி இன்னும் உறுதியானதாக தெரியவில்லை என்ற அவர், காங்., கட்சிக்குள்ளேயே விரிசல் உள்ளதால், விஜய் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என கூறினார்.
Similar News
News February 28, 2026
Gen Z காங்கிரஸுக்கு பாடம் புகட்டுவார்கள்: மோடி

இந்தியாவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடையாக இருப்பதாக PM மோடி சாடியுள்ளார். TN-ல் ஏழை எளிய மக்களுக்கு 9.5 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், திமுக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். முன்னர் 90s கிட்ஸ் காங்கிரஸுக்கு பாடம் புகட்டிய நிலையில், இப்போது Gen Z பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News February 28, 2026
ராசி பலன்கள் (28.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 28, 2026
அரசனில் இருந்து விஜய் சேதுபதி விலகலா?

‘அரசன்’ படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக செய்தி பரவி வருவது குறித்து தயாரிப்பாளர் தாணு விளக்கம் அளித்துள்ளார். இது வெறும் வதந்தி என தெரிவித்த அவர், இதுபோன்ற செய்திகள் எல்லாம் ஒன்று தன்னிடம் இருந்தோ, இயக்குநரிடம் இருந்தோதான் வர வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளார். மக்களின் கவனத்தை பெறுவதற்காக இது போன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.


