News February 22, 2026

நீலகிரி: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

image

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 27, 2026

நீலகிரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

நீலகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 27, 2026

நீலகிரி மக்களே வனத்துறை எச்சரிக்கை!

image

கூடலூர் அருகே சேரம்பாடி – கேரள மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள காபி தோட்டங்கள் மற்றும் ஏலியாஸ் கடை பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் உணவு தேடி யானைகள் சாலைக்கு வருவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். விபத்துகளைத் தவிர்க்க இப்பகுதியில் கவனமாக வாகனங்களை இயக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News February 27, 2026

கூடலூர் அருகே விபத்து!

image

கூடலூர் – நாடுகாணி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிப்பாடி அருகே இரவு 8 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த 12 சக்கர லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!