News February 22, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம்தான். அந்த வகையில், புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்கு பிப்.25-ல் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 7-ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச வேண்டாம்: CTR

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பாக SM-ல் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தவெகவின் CTR நிர்மல்குமாரிடமும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News March 2, 2026
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. தமிழக அரசு கொடுத்த அப்டேட்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வருவதால் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 2-ம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வை முடித்துவிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
News March 2, 2026
சின்னம்மை பாதிப்பு… சுகாதாரத்துறை எச்சரிக்கை

கோடை வெப்பத்தில் ஏற்படும் சின்னம்மை பாதிப்பு பிப்., இறுதியிலேயே TN-ல் தொடங்கிவிட்டதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதோடு, சின்னம்மை பாதிப்பு இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


