News February 22, 2026
CM ஸ்டாலின் Lion இல்ல.. லையர்: தமிழிசை

ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் தானே லயன் என சொல்லும் CM உண்மையில் லயன் கிடையாது லையர்(Liar-பொய்யர்) என தமிழிசை விமர்சித்துள்ளார். CM நிறைய பொய் சொல்வதாக சாடிய அவர், மத்திய அரசு உதவாமல் எப்படி TN முன்னுக்கு வர முடியும் என கேட்டுள்ளார். மேலும், அமைச்சர் நேரு மீது நடவடிக்கை எடுக்க ஆதாரங்கள் இருப்பதாகவும், குற்றங்களை செய்துவிட்டு பழிவாங்கும் நடவடிக்கை என கூறுவது வழக்கமாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 25, 2026
NCERT பாடத்திட்டத்தில் சர்ச்சை.. CJI அதிருப்தி

<<19235285>>NCERT <<>>8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளதற்கு CJI சூர்யகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகாரை மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் CJI முன் கொண்டுவந்தார். அப்போது, நீதித்துறைக்கு யாரும் களங்கம் கற்பிப்பதை அனுமதிக்க மாட்டேன் என்றும், சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் சூர்யகாந்த் உறுதியளித்துள்ளார்.
News February 25, 2026
அனைத்து குடும்பத்திற்கும் ₹10,000.. யாருக்கு கிடைக்கும்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், ₹10,000 உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்று EPS கூறியுள்ளார். ஆண்டுதோறும் வழங்கப்படாது என்றும் கூறினார். எதன் அடிப்படையில் கிடைக்கும் என தெரிவிக்காததால், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்குமே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
News February 25, 2026
நடிகர் ரஜினி உருக்கமான இரங்கல்

மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது என அவர் தனது X பதிவில் கூறியுள்ளார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்றும், அவருடைய இழப்பால் வாடும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். #RIP நல்லகண்ணு


