News May 12, 2024
உதகை:126 மலர் கண்காட்சியில் நீராவி மலை ரயில்

இயற்கை எழில் சூழ்ந்த உதகையில் தற்போது 126 மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 80 ஆயிரம் கொய் மலர்களைக் கொண்டு 33 அடி நீளம், 25 அடி அகலம், 20 உயரத்தில் யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் சப்தம் வரும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல ரகங்களில் லட்சக்கணக்கான மலர்ச் செடிகள் மலர் மாடங்களை அலங்கரித்திருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
Similar News
News November 11, 2025
குன்னூர்: தேனி கொட்டியதில் வனத்துறையினர் காயம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேனீக்கள் கொட்டியதில் வண்டிச்சோலை பாரஸ்ட் நர்சரி வனத்துறையில் பணிபுரியும் ஐந்து பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளர்.
News November 10, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி ஆட்சியரின் செய்தி குறிப்பில் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ மாணவியருக்கு 15,000 பரிசு தொகையும் பாராட்டு சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி அன்று திருக்குறள் முற்றோதல் போட்டி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றார்.
News November 10, 2025
நீலகிரி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

நீலகிரி மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


