News February 21, 2026
MGR உருண்டு உருண்டு அழுதிருப்பார்: உதயநிதி

மோடிக்கு ஏற்ற முரட்டு அடிமையாக EPS மாறிவிட்டார் என்று DCM உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு MGR-ன் படம் பார்த்த EPS கண்கலங்கிய காட்சிகள் வைரலானது. இதனைக் குறிப்பிட்ட உதயநிதி, இன்று MGR உயிருடன் இருந்திருந்தால் EPS-ஐ பார்த்து உருண்டு உருண்டு அழுதிருப்பார் என கூறினார். நான் தொடங்கிய கட்சியை இப்படி செய்துவிட்டாயே என்று MGR வேதனைப்பட்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.
Similar News
News February 21, 2026
மகளிர் வங்கிக் கணக்கில் ₹25,000.. FACTCHECK

‘Women Work from Home Scheme’ திட்டத்தின்கீழ் மகளிருக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கி, மாதம் ₹25,000 சம்பளம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இது பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB FACTCHECK) விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற போலி தகவல்களை 87997 11259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையை அறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 21, 2026
கமல், ரஜினி இணைந்து நடித்த படங்கள் (PHOTOS)

திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சும் ரஜினியும், கமலும் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமல்லாமல் Geraftaar என்ற ஹிந்தி படத்தையும் சேர்த்து மொத்தம் 21 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அவற்றில் சிலவற்றை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். இதில் இடம்பெறாவிட்டலும், உங்களுக்கு பிடித்தமான படத்தை கமெண்ட் செய்யவும்.
News February 21, 2026
திமுகவிடம் காசு வாங்கிய தேமுதிக: நயினார்

NDA கூட்டணி வலுவாகவும், திமுக கூட்டணி வலுவிழந்து இருப்பதாகவும் நயினார் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் சேர்ந்த தேமுதிகவை மறைமுகமாக சாடிய அவர், பணப்பெட்டியை வாங்கிக்கொண்டுதான் திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள் எனவும் பேசியுள்ளார். மேலும், OPS மீது மதிப்பு வைத்துள்ளதாகவும், எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர்தான் முடிவு செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


