News May 12, 2024

வருண் காந்திக்கு சீட் மறுப்பு ஏன்? மேனகா காந்தி பதில்

image

வருண் காந்திக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு அவரின் தாயும், பாஜக வேட்பாளருமான மேனகா காந்தி பதிலளித்துள்ளார். பாஜக அரசை விமர்சித்ததே சீட் ஒதுக்கப்படாததற்கு அதிகபட்ச காரணமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த முறை பாஜக சார்பாக பிலிபிட் தொகுதியில் நின்ற வெற்றி பெற்ற வருண் காந்திக்கு பாஜக இந்த முறை சீட் தரவில்லை. கடந்த சில மாதங்களாக, அவர் பாஜகவை விமர்சனம் செய்து வந்தார்.

Similar News

News September 18, 2025

2 நாளில் 11 கொலைகள்

image

TN-ல் கடந்த 2 நாள்களில் மட்டும் 11 கொலைகள் அரங்கேறியுள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மயிலாடுதுறை (ஆணவக்கொலை), திருப்பத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நெல்லை, விருதுநகர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 11 கொலைகள் நடந்துள்ளது. தென்மாவட்டங்களை தொடர்ந்து, தற்போது வட – மேற்கு மாவட்டங்களிலும் படுகொலைகள் அரங்கேற தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

News September 18, 2025

அதிகமாக டீ, காபி குடிக்கிறீங்களா? எச்சரிக்கை!

image

ஒருநாளுக்கு 2 முறைக்கும் அதிகமாக டீ, காபி குடிப்பவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கிறாங்க. டீ-யில் உள்ள Tanin, காபியில் உள்ள கஃபைன் உடலை இரும்பு சத்தை உறிஞ்சவிடாமல் தடுக்கிறதாம். இதனால் ரத்தசோகை ஏற்படுகிறது. மேலும், High BP, அஜீரண கோளாறு, அல்சர், மூட்டு வலி, இருதய பிரச்னைகள் கூட வரும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஒருநாளுக்கு எத்தனை கப் டீ/காபி குடிப்பீங்க?

News September 18, 2025

ChatGPT-ஐ மக்கள் இதற்கு தான் யூஸ் பண்றாங்களா!

image

உலகளவில் மக்கள், AI சாட்பாட்டான ChatGPT-ஐ எதற்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து OpenAI ஆய்வு நடத்தியது. அதில் உலக மக்களில் 49% பேர் கேள்விகளை கேட்டு பதில் பெறும் அஸிஸ்டெண்டாகவும், 40% பேர் ஒரு வேலையை செய்து முடிக்க அதை ஒரு வழிகாட்டியாக பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. அதேபோல், உலகில் ChatGPT-ஐ அதிகம் பயன்படுத்துவதில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!