News May 12, 2024
மே 12 : வரலாற்றில் இன்று

➤907 – சீனாவில் 300 ஆண்டுகளுக்கு பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது.
➤1784 – பாரிசு உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.
➤1949 – சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
➤2003 – ரியாத் நகரில் அல் கொய்தா மேற்கொண்ட தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
➤2015 – நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 218 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News September 18, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹50 குறைந்து ₹10,220-க்கும், சவரனுக்கு ₹400 குறைந்து ₹81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கம் விலை, மீண்டும் குறைய தொடங்கியதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News September 18, 2025
Fatty Liver வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

வயதானவர்கள், மது பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருந்துவந்த கொழுப்புக் கல்லீரல் (ஃபேட்டி லிவர்) நோய், தற்போது குழந்தைகள்கூட பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், பெரிதாக எந்த அறிகுறியும் தெரியாது என்பதே இதை இன்னும் கொடியதாக ஆக்குகிறது. எனவே இந்நோய் உங்களுக்கு வராமல் இருக்க/நோயில் இருந்து விடுபட மேலே போட்டோக்களில் காட்டப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுங்கள். பிறருக்கு இதை தவறாமல் SHARE செய்யுங்கள்.
News September 18, 2025
Ex CM வங்கி கணக்கை ஹேக் செய்து ₹3 லட்சம் திருட்டு

கர்நாடகா Ex CM சதானந்த கவுடாவிடம் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. அவரது 3 வங்கி கணக்கை ஹேக் செய்த மர்ம கும்பல், அதில் இருந்து ₹3 லட்சத்தை திருடியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே சில நாட்கள் முன் கர்நாடக பிரபல நடிகரும் இயக்குநருமான <<17721322>>உபேந்திரா <<>>மற்றும் அவரது மனைவியின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.