News May 11, 2024

இரவில் நல்ல தூக்கம் கிடைக்க இதை அருந்தலாமே

image

இரவில் 8 மணி நேரம் ஒருவர் தூங்குவது அவசியமாகும். அப்படி தூங்கினால், காலையில் எழுந்திருக்கையில் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் இயந்தரமயமான இந்த சூழ்நிலையில், இரவில் தூக்கம் வராமல் பலர் இன்னல் படுகின்றனர். அத்தகையவர்கள், கீழ் காணும் பானங்களில் ஏதேனும் ஒன்றை அருந்திவிட்டு சென்றால், நல்ல தூக்கம் கிடைக்கும். 1) வெதுவெதுப்பான பாடல் 2) இளநீர் 3) வாழைப்பழ ஜுஸ் 4) குங்குமப்பூ கலந்த பாதாம் பால்.

Similar News

News November 18, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு ₹2,000.. வந்தது அப்டேட்

image

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹2,000 வழங்க CM ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதற்கான நிதி ஏற்பாடுகளை செய்யுமாறு நிதித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வழக்கம்போல் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 18, 2025

காங்கிரஸில் சேர விஜய் முயற்சி… பரபரப்பு தகவல்

image

விஜய் 2010-ல் ராகுலை சந்தித்து காங்கிரஸில் இணைய முன்வந்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு விஜய் புதியவர் அல்ல, சில காரணங்களால் விஜய் தங்கள் கட்சியில் இணைய முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக, காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா என யூகங்கள் எழுந்த நிலையில், ஜோதிமணி இதனை தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள்(காங்.,) இதுவரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

News November 18, 2025

சற்றுமுன்: வரலாறு காணாத விலை உயர்வு… புதிய உச்சம்

image

முட்டை கொள்முதல் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டையின் கொள்முதல் விலை ₹6.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விலையில் 1 முட்டை ₹7 – ₹8 வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.

error: Content is protected !!