News February 20, 2026

சிவகங்கை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. APPLY NOW

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News February 21, 2026

சிவகங்கை: விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் பலி.!

image

முளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவவீரர் கண்ணன்.‌ இவருக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. விடுப்பில் ஊருக்கு வந்த அவர் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ராமலிங்கம்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற பைக்கில் மோதி கீழே விழுந்ததில் பின்னால் வந்த கார் அவர் மீது மோதி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 21, 2026

சிவகங்கை: நீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

image

செண்பகம்பேட்டையைச் சேர்ந்த கருப்பாயி (வயது 78), வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அவர் ஊருணி பகுதிக்கு சென்றது தெரிந்தது. தீயணைப்பு துறையினர் ஊரணியில் இறங்கி தேடியபோது இறந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார். கீழச்சீவல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 21, 2026

சிவகங்கை: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம், அரசனூர் துணை மின்நிலையத்தில் இன்று (பிப்.21) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், பில்லூர், களத்தூர் உட்பட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!