News February 20, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.19) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 20, 2026
புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுக்கோடை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 20, 2026
புதுக்கோட்டை: பைக் மீது லாரி மோதி விபத்து – ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் விளாத்துப்பட்டியிலிருந்து நார்த்தாமலைக்கு நேற்று பாண்டி செல்வம்(40) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது விளாத்துபட்டி இடையன்குளம் அருகே எதிரே கதிர்வேல்(36) என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியதில், பாண்டி செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி அளித்த புகாரில் அன்னவாசல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News February 20, 2026
புதுக்கோட்டை: இன்று மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில். நாகுடி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலைத்தில் இன்று(பிப்.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இத்துணை மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் ஆவுடையார்கோவில். நாகுடி மற்றும் வல்லவாரி சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


