News May 11, 2024

காஞ்சியில் வசமாக சிக்கிய திருடன்

image

சில தினங்களாகவே காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடுபோயின. இந்நிலையில் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்த போலீசார் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஒலிமுகம்மதுபேட்டை பகுதியைச் சேர்ந்த தரணிதரன் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து ஏழு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News July 9, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (08.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 12 (சனிக்கிழமை) அன்று காலை 10:00 மணிக்கு பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்கள் காஞ்சிபுரம் வட்டத்தில் கீழ்கதிர்பூர், உத்திரமேரூர் வட்டத்தில் மலையாங்குளம், வாலாஜாபாத் வட்டத்தில் களக்காட்டூர், திருப்பெரும்புதூர் வட்டத்தில் கீவளுர், மற்றும் குன்றத்தூர் வட்டத்தில் நாட்டரசன்பட்டு ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின்படி நடைபெறும்.

News July 8, 2025

வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு 2/2

image

தமிழ்நாடு வீட்டு வாடகை முறைப்படுத்துதல் புதிய சட்டம் 2017: *குடியிருப்பவர் வீட்டிற்குள் வீட்டு உரிமையாளர் காலை 7 மணிக்கு முன்பு, இரவு 8 மணிக்கு பின்னர் செல்ல கூடாது. *3 மாத வாடகையை மட்டுமே முன்பணமாக பெற வேண்டும். *ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். *ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. *கட்டாயம் ரசிது தர வேண்டும். *ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!