News May 11, 2024
திருச்சி: மின்சாரம் பாய்ந்து 2 பெண்கள் பலி

திருச்சியில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.திடிரென்று இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது. இதையடுத்து திருச்சி, சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து பகுதியில் விவசாய நிலத்தில் மழையால் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 பெண்கள் பரிதமபாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News July 6, 2025
திருச்சி: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News July 6, 2025
திருச்சி: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News July 6, 2025
திருச்சி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருச்சி தெற்கு கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் குமார் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் விழுப்புரம்-ராமேஸ்வரம் இடையே வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை வருகிற ஜூலை 12-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.