News May 11, 2024
திருச்சியில் மழைக்கு வாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோடையின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 6, 2025
திருச்சி: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News July 6, 2025
திருச்சி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருச்சி தெற்கு கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் குமார் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் விழுப்புரம்-ராமேஸ்வரம் இடையே வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை வருகிற ஜூலை 12-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
News July 6, 2025
திருச்சி மாவட்டத்தில் சூப்பர் திட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நகர்புற மற்றும் கிராம புற மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் வரும் 15.07.2025 அன்று துவங்கி 14.08.2024 வரை நடைபெற உள்ளது. இது திருச்சி மாவட்டத்திலுள்ள மாநகராட்சியில் 8 முகாம்களும், நகராட்சிகளில் 19 முகாம்களும், பேரூராட்சிகளில் 14 முகாம்களும், வட்டார ஊராட்சிகளில் 59 முகாம்களும் மற்றும் புறநகர் ஊராட்சிகளில் 20 முகாம்களும் நடைபெற உள்ளது.