News May 11, 2024
5 மாதங்களில் பட்டாசு விபத்தில் 28 பேர் பலி

கடந்த 5 மாதங்களில் மட்டும் பட்டாசு விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கவலை தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலைகளுக்கான விதிமுறைகளை கண்டறிந்து தமிழக அரசு ஆய்வுகளை நடத்துமா? என்றும் தொழிலாளர்களுக்கான புதிய பாதுகாப்பை வழங்க முயற்சி எடுக்குமா? எனவும் அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். இம்மாதத்தில் இதுவரை 5 முறை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 20, 2025
ஸ்டாலினுக்கு விஜய் எச்சரிக்கை

தவெக தேர்தல் பரப்புரைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய விஜய், மிரட்டி பார்க்குறீங்களா CM சார் என கேள்வி எழுப்பினார். மேலும், ‘பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் விட்டுவிட்டு தில்லா கெத்தா நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க சார், நீங்களா இந்த விஜய்யா என பார்த்துக் கொள்வோம்’ என எச்சரிக்கும் தொனியில் அவர் பேசினார். 2026-ல் TVK, DMK இடையேதான் போட்டி எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
நாளை சூரிய கிரகணத்தை பார்க்க முடியுமா?

நாளை(செப்.21) சூரிய கிரகணம், இந்திய நேரப்படி இரவு 10:59-ல் தொடங்கி அதிகாலை 3:23-க்கு முடிவடைகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் நிலவு சூரியனின் 85% பரப்பை மறைக்கும். ஆனாலும், கிரகணம் இரவில் வருவதால் இந்தியாவில் பார்க்க முடியாது. ஆனால், பூமியின் தென்கோளத்தில் அமைந்துள்ள நியூசி., கிழக்கு ஆஸ்திரேலியா, தென் பசிபிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் இது தெரியும்.
News September 20, 2025
BREAKING: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் நீண்டகாலமாக பங்களிப்பு அளித்து வரும் நட்சத்திரங்களுக்கு, வழங்கப்படும் இவ்விருதை மோகன்லால் இம்முறை பெறுகிறார். இதற்கு முன்பு மலையாள திரையுலகில் இருந்து அடூர் கோபாலகிருஷ்ணன் இவ்விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 23-ம் தேதி நடக்கும் தேசிய விருதுகள் விழாவில் மோகன்லால் இவ்விருதை பெறுகிறார்.