News May 11, 2024
ஜூலை 2இல் துணைத் தேர்வு?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Similar News
News November 7, 2025
கரூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)
News November 7, 2025
கரூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <
News November 7, 2025
கரூர்: தீக்குளித்த ஊழியர் பலி!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புதுப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (39), பைனான்ஸ் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து மனவிரக்தியில் இருந்த அவர் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு உயிரிழந்தார். மனைவி சித்ராதேவி அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


