News May 11, 2024

இன்னும் ஒரு அணி கூட ப்ளே-ஆப்க்குள் நுழையவில்லை

image

நடப்பு ஐபிஎல் தொடரில் 59 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் ஒரு அணி கூட ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. KKR, RR-16, SRH-14, CSK, DC, LSG-12, RCB, GT-10, MI, PBKS-8 புள்ளிகளுடன் உள்ளன. மும்பை, பஞ்சாப் அணிகள் தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறின. இன்னும் 11 போட்டிகளே உள்ளதால், ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், கொல்கத்தா அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும்.

Similar News

News September 21, 2025

இந்த பெருமை எனக்கு மட்டும் உரியது அல்ல: மோகன்லால்

image

சினிமாவில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வானது குறித்து மோகன்லால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பெருமை தனக்கு மட்டுமல்ல, இத்தனை வருட பயணத்தில், தன்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் உரியது எனவும், அவர்களே ஊக்கம் தந்து தன்னை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த அங்கீகாரத்தை ஆழ்ந்த நன்றியுடனும், முழுமனதுடனும் ஏற்றுக்கொளவதாக தெரிவித்துள்ளார்.

News September 21, 2025

செப்டம்பர் 21: வரலாற்றில் இன்று

image

*உலக அமைதி நாள். *சம இரவு நாள் (வடக்கு அரைக்கோளம்). *1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் மன்னராட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. *1949- சீன புரட்சி வெற்றி பெற்று, மா சே துங் நாட்டின் தலைவரானார். *1979 – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் பிறந்தநாள்.

News September 21, 2025

சபரிமலையை மேம்படுத்த ₹1,000 கோடி

image

சபரிமலை வளர்ச்சி பணிகளுக்காக மாஸ்டர் பிளான் திட்டம் வகுக்கப்பட்டு, ₹1,000 கோடி செலவிடப்படும் என கேரளா CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஆன்மிக மற்றும் சன்னிதானத்தின் கலாசார புராதனங்களை பாதிக்காத வகையில், 2039-க்குள் இந்த வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், சபரிமலை ரயில்வே, விமானநிலையம், ரோப்கார் சேவை என பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!