News February 17, 2026

மொடக்குறிச்சி அருகே விபத்து: 6 பேர் படுகாயம்

image

கொடுமுடி காசிபாளையத்தைச் சேர்ந்த ஹனிபா மற்றும் அவரது உறவினர்கள் ஈரோட்டிலிருந்து திரும்பும்போது, சாவடிப்பாளையம்புதூர் அருகே விபத்து ஏற்பட்டது. மோகன்ராஜ் (21) ஓட்டி வந்த சரக்கு வாகனம் ஆம்னி வேன் மீது மோதியதில், வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News February 20, 2026

சென்னிமலையில் பைக் தீ வைத்து எரிப்பு

image

சென்னிமலை , மேலப்பாளையம், பெருமாள் கோவில் வீதியில் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த TVS XL வாகனம் இன்று அதிகாலை தீப்பற்றி எரிவதைக் கண்டு செந்தில் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், எதிர் வீட்டில் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துகுமார் (35) என்பவரை சென்னிமலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2026

ஈரோடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 20, 2026

ஈரோடு: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!