News February 17, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (16.02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News February 18, 2026

பிற மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்தால் நடவடிக்கை – கலெக்டர்

image

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகள் மூலமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட, மாநில நெல் கொள்முதல் செய்தால் நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.

News February 18, 2026

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>https://lakhpatididi.gov.in/ என்ற<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 18, 2026

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

சிவகங்கை: சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது விரைவு வண்டி எண்கள்: 22661/22662 வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் நடக்கும் மராமத்து பணிகள் காரணமாக பிப்.20 முதல் ஏப்.05 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கம் தாம்பரம் வரை செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த மாற்றத்திற்கு ஏற்ப பயணத்தை அமைத்து கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!