News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Similar News

News August 30, 2025

கிருஷ்ணகிரி: செல்போன் தொலைஞ்சிடுச்சா.. நோட் பண்ணிக்கோங்க

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. <>சஞ்சார் சாத்தி <<>>என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

BREAKING: கிருஷ்ணகிரி போலீஸ் அதிரடி

image

காவேரிப்பட்டினம் அருகே மோட்டூர் கிராமத்தில் கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறி பரிகாரம் செய்ய வேண்டுமென நாடகமாடி, பச்சிளம் குழந்தையை கடத்திய விஜயசாந்தி என்பவரை ஓசூரில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளர் முரளி குழந்தையை தாயிடம் பத்திரமாக ஒப்படைத்தார். தனக்கு பிறந்த குழந்தை இறந்ததால் கடத்தியதாக விஜயசாந்தி போலீசிடம் தெரிவித்துள்ளார்.

News August 30, 2025

கிருஷ்ணகிரி: நண்பர்களின் அலப்பறையால் நின்ற திருமணம்

image

கிருஷ்ணகிரி அருகே குடித்து விட்டு நண்பர்கள் செய்த அலப்பறையால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆக.26 திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மகனின் நண்பர்கள் குடித்து மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், மாப்பிள்ளையின் நண்பர்கள் விட்டபாடில்லை. இதனால் கோபமான மணப்பெண், மாப்பிள்ளையையே வேண்டாம் என திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

error: Content is protected !!